திமுகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., பி.ஆர்.சுந்தரம் காலமானார்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., பி.ஆர். சுந்தரம் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.
கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரையிலும், அதன் பின்னர் 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரையிலுமாக இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்து வந்தவர் பி.ஆர்.சுந்தரம்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, ஓ.பி.எஸ். ஆதரவாளராக செயல்பட்டு வந்த பி.ஆர்.சுந்தரம் அதன் பின்னர் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டு கட்சிப் பணியில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.
சமீபத்தில் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகியிருந்த பிஆர்.சுந்தரம் உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று அதிகாலை காலமானார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!