ஆந்திர முன்னாள் துணை முதல்வர் அல்லா நானி மாரடைப்பால் காலமானார் - தலைவர்கள் அதிர்ச்சி!

 
ஆந்திரா முன்னாள் துணை முதல்வர் அல்லா நானி

ஆந்திரப் பிரதேச அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், முன்னாள் துணை முதலமைச்சரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான அல்லா காளி கிருஷ்ண சீனிவாஸ் (அல்லா நானி) மாரடைப்பு காரணமாக காலமானார்.

அல்லா நானி தனது அரசியல் வாழ்க்கையை மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தொடங்கி வெற்றிகண்டார்.

பின்னர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையில் மாநிலத்தின் துணை முதலமைச்சராகவும், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் முக்கியப் பொறுப்புகளை வகித்தார்.

ஒய்.எஸ்.ஆர்.சி.பி-யிலிருந்து விலகிய அவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கு தேசம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரது திடீர் மறைவு ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல முக்கிய அரசியல் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.