கொலை வழக்கில் சிக்கிய முன்னாள் வங்கதேச பிரதமர்.. போலீசார் அதிரடி!
கடந்த சில வாரங்களில் வங்கதேசம் மிக மோசமான வன்முறையை கண்டுள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, அங்கு சற்று அமைதி திரும்பியுள்ளது. இந்நிலையில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா மீது தற்போது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நமது அண்டை நாடான வங்கதேசம் சில வாரங்களாக மாணவர் போராட்டத்தால் அதிர்ந்தது. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடங்கிய போராட்டம் மெல்ல மெல்ல நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக திரும்பியது. ஹசீனா பதவி விலகக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பல இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அங்கிருந்து தப்பி இந்தியா வந்துள்ளார். இதையடுத்து, வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்ததால், அங்கு அமைதி மெல்ல திரும்பி வருகிறது. இதற்கிடையில், வங்கதேசத்தில் கடந்த மாதம் நடந்த உள்நாட்டு கலவரத்தின் போது போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் முந்தைய அரசில் அங்கம் வகித்த 6 உயர் அதிகாரிகள் மீது வங்கதேச நீதிமன்றம் கொலை வழக்கைத் தொடங்கியது.

வங்கதேசத்தை சேர்ந்த வழக்கறிஞர் மாமூன் மியா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கறிஞர் மாமூன் மியா கூறுகையில், டாக்காவில் உள்ள நீதிமன்றம் சம்பந்தப்பட்ட ஏழு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக அந்நாட்டு போலீசார் குற்ற விசாரணை நடத்துவார்கள் என தெரிகிறது. ஹசீனா மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
