காலை இழந்த முன்னாள் கோப்ரா கமாண்டோ… ஆசிய பாரா விளையாட்டில் தங்கம் வென்று உலக சாதனை!

 
பாரா

 

நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஒரு காலை இழந்த முன்னாள் கோப்ரா கமாண்டோ டோமன் குமார், தற்போது வில்வித்தையில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார். ஜப்பானின் நாகோயாவில் நடைபெறும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், இந்திய வீராங்கனை ஷீத்தல் தேவியுடன் இணைந்து கலப்பு அணிப் பிரிவில் அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.

toman kumar - The Statesman

இறுதிப் போட்டியில் இந்த ஜோடி இந்தோனேசிய அணியை 151-148 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது. இதற்கு முன்னதாக, தகுதிச் சுற்றில் 1,402 புள்ளிகளைப் பெற்று உலகச் சாதனையையும் இருவரும் படைத்தனர். முந்தைய உலகச் சாதனையைவிட இரண்டு புள்ளிகள் அதிகம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Former CoBRA commando strikes gold, 4 yrs after losing foot in anti-Maoist op

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த டோமன் குமார், 2022-ஆம் ஆண்டு ஜார்க்கண்டில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது வெடிகுண்டு தாக்குதலில் இடது காலை இழந்தார். அதன் பிறகு பாரா வில்வித்தைப் பயிற்சியைத் தொடங்கிய அவர், 2025-ஆம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தையும் வென்றார். தற்போது ஆசிய அளவிலும் தங்கம் வென்று தனது சாதனைப் பயணத்தைத் தொடர்கிறார்.