முன்னாள் திமுக எம்பி அப்துல்லாவின் தாயார் காலமானார்... திமுக தலைவர்கள் இரங்கல்!
Aug 13, 2026, 17:35 IST
திமுக அயலக அணிச் செயலாளரும், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினருமான எம்.எம். அப்துல்லாவின் தாயார் நபீசா பீவி இன்று இயற்கை எய்தினார். நபீசா பீவியின் மறைவுச் செய்தி அறிந்ததும், திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "அன்புடனும் பாசத்துடனும் தன்னை வளர்த்து ஆளாக்கிய அன்னையை இழந்து வாடும் சகோதரர் எம்.எம். அப்துல்லா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இந்தத் துயரமான நேரத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். அன்னாரது மறைவுக்கு திமுக உடன்பிறப்புகளும், பல்வேறு அமைப்பினரும் தங்களது அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
