முன்னாள் அதிபர் டுடெர்டே மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை: நவ.30-ல் தொடக்கம்!
Nov 27, 2026, 20:30 IST
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே மீதான சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ICC) விசாரணை வரும் நவம்பர் 30-ஆம் தேதி தொடங்க உள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின்போது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட விவகாரத்தில், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அவர் மீது இந்த விசாரணை நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட டுடெர்டே, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை அமர்விற்கு மாற்றப்பட்டு முதற்கட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

இந்த வழக்கு விசாரணை நீதி மற்றும் பொறுப்புக்கூறலில் முக்கியமான சோதனையாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை பல்வேறு கட்டங்களாக இந்த விசாரணை நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
