இலங்கை முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் காலமானார்!
இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் (69) உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.
இலங்கை அரசியலில் தீவிரத் தமிழ் உணர்வாளராகவும், செயல்பாட்டாளராகவும் அறியப்பட்ட சிவாஜிலிங்கம், 2001 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகத் (எம்.பி.) தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று, வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும் மக்கள் பணியாற்றினார்.
கடந்த சில நாட்களாகச் சிறுநீரகத் தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், வல்வெட்டித்துறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு இலங்கையின் பல்வேறு அரசியல் தலைவர்கள், தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
