இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மனைவி கைது!

 
இலங்கை மகிந்த ராஜபக்சே மனைவி ஷிராந்தி ராஜபக்சே

இலங்கை நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மனைவியும், தொண்டு நிறுவன நிர்வாகியுமான ஷிராந்தி ராஜபக்சே நிதி மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சே இலங்கை

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மனைவியான ஷிராந்தி ராஜபக்சே (73), நிதி மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நேற்று லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பகுதியில் உள்ள போல்ஹெங்கொடாவில் அமைந்துள்ள அவரது இல்லத்திலேயே இந்த அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை ராஜபக்சே

ஷிராந்தி ராஜபக்சேவால் நிர்வகிக்கப்பட்டு வந்த 'சிரிலிய சவிய' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்கைத் தவறாகப் பயன்படுத்தி, அரசு வங்கியிலிருந்து ரூ. 1 கோடி முறைகேடு செய்ததாக அவர் மீது தீவிரக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், இலங்கை அரசியலில் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.