வங்கக்கடலில் உருவாகப் போகும் ‘பெங்கால்’ புயல்... வங்கக்கடலில் கரையை கடக்க வாய்ப்பு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் விரைவில் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது சென்னையில் கரையை கடக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று நவம்பர் 21ம் தேதி வியாழக்கிழமை ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்.
இதன் காரணமாக நவம்பர் 23ம் தேதி சனிக்கிழமை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகலாம். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு நாட்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது சென்னையில் கரையை கடக்கக்கூடும் என தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். வங்கக்கடலில் இன்று உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நவம்பர் 23ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருமாறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலாக வலுப்பெற்றால் ஃபெங்கல் என பெயரிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!