2026ல் 4 கிரகணங்கள்.. இந்தியாவில் ஒரு சந்திர கிரகணம் மட்டுமே தெரியும் - முழு விவரம்!
2026ம் ஆண்டில் வானில் மொத்தம் நான்கு கிரகணங்கள் (2 சூரிய கிரகணங்கள் மற்றும் 2 சந்திர கிரகணங்கள்) நிகழவுள்ளன. இதில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு சந்திர கிரகணத்தை மட்டுமே காண முடியும் என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சூரிய கிரகணங்கள் (இந்தியாவில் தெரியாது): பிப்ரவரி 17, 2026: இது ஒரு 'வளைய சூரிய கிரகணம்'. இது அண்டார்டிகா, தென்னாப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் மட்டுமே தெரிந்தது.

ஆகஸ்ட் 12ம் தேதி தோன்ற இருக்கும் 'முழு சூரிய கிரகணம்'. இது ரஷ்யா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் தெரியும்.
சந்திர கிரகணங்கள்: மார்ச் 3ம் தேதி ஒரு 'முழு சந்திர கிரகணம்' தோன்றியது. இந்த கிரகணத்தின் இறுதிப் பகுதியை இந்தியாவில் காண முடிந்தது. இந்தியாவில் மாலை 3:20-க்குத் தொடங்கி 6:48-க்கு முடிவடைந்தது. சந்திரன் உதிக்கும் போதே கிரகணம் பிடித்துக் காணப்படும் என்பதால், வடகிழக்கு இந்திய மாநிலங்கள் மற்றும் அந்தமான் தீவுகளில் இது தெளிவாகத் தெரிந்த நிலையில் சென்னை, டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் மிகக் குறைந்த நேரம் (சுமார் 20-30 நிமிடங்கள்) மட்டும் இதைக் காண முடிந்தது.

ஆகஸ்ட் 28ம் தேதி ஒரு 'பகுதி சந்திர கிரகணம்' நிகழ இருக்கிறது. இது ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டங்களில் தெரியும். இதுவும் இந்தியாவில் தெரியாது.
சூரிய கிரகணங்கள் இந்தியாவில் தெரியாது என்பதால், அதற்கான 'சூதக் காலம்' மற்றும் வழிபாட்டுக் கட்டுப்பாடுகள் இந்தியாவில் பொருந்தாது. ஆனால் மார்ச் 3ம் தேதி நடந்த சந்திர கிரகணத்தின் போது, இந்தியாவின் சில பகுதிகளில் கோவில் நடை திறப்பு நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
