ரயில் மோதியதில் 4 பேர் உடல் சிதறி பலி...பெரும் சோகம்!

 
ரயில் தண்டவாளம்

 சேலம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட   தொழிலாளர்கள்  40 வயதில் சேகர், 50 வயது சுப்பிரமணி, 50 வயது துரை  ஆகியோர். இவர்கள் மூவரும் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்  தங்கியிருந்து பெயிண்டிங் வேலைகள் செய்து வந்தனர். நேற்று வேலை முடிந்ததை அடுத்து 3 பேரும் இரவு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்ட்ரல் செல்வதற்காக டிக்கெட் வாங்கினர். 

ரயில் தண்டவாளம்
 இதில் சேகர் மற்றும் சுப்பிரமணி ஆகிய 2 பேரும் தண்டவாளத்தை கடக்க முயற்சித்தனர்.  அந்த வழியாக வந்து கொண்டிருந்த  எக்ஸ்பிரஸ் ரயில் சேகர் மற்றும் சுப்பிரமணி மீது மோதியதில்  இருவரும்  உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ரயில் தண்டவாளம்
அதேபோல் குரோம்பேட்டை நேரு நகர் பகுதியில் வசித்து வருபவர் 23 வயதான பிரணவ். இவர் ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து  வந்தார். நேற்று இரவு பணி முடிந்து பிரணவ் ரயிலில் குரோம்பேட்டை ரயில் நிலையம் வந்தார்.  இங்கிருந்து வெளியே செல்வதற்காக தண்டவாளத்தை கடந்துள்ளார். அந்நேரத்தில் தாம்பரத்தில் இருந்து வந்த மின்சார ரயில் மோதியதில் உடல் சிதறி பிரணவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதே போல் நுங்கம்பாத்தில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த 39 வயதான   சதீஷ் நேற்று இரவு பணி முடிந்து ரயிலில் குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் வந்தார். அங்கிருந்து  வெளியே செல்வதற்காக தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த மின்சார ரயில் மோதி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையில் நேற்று இரவு இரு வேறு இடங்களில் ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 4  பேர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தையும்,  அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web