“நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்” - மு.க.ஸ்டாலின் அறிக்கை!

 
ஸ்டாலின் தாராபுரம்

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக ஆட்சியையும் முதல்வர் விஜயையும் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தவெக தன்னை ஒரு 'தூயசக்தி' என முன்னிறுத்திக் கொண்ட போதிலும், அந்த ரீல் நான்கே மாத கால ஆட்சியிலேயே அறுந்துபோய்விட்டதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.


"அசையாத மரமொன்று விழுந்தது கீழே" என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வி பயத்தில்தான் முதல்வர் விஜய் தற்போது தெருவலம் போய் பிரச்சாரம் செய்து வருவதாக அவர் சாடியுள்ளார்.

தேர்தல் களத்தில் டிபன் கேரியர்களில் வைத்துப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும் அவர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களைப் பதவிகளில் பாதுகாப்பது, மாநிலத்தில் 8 மணி நேர மின்வெட்டு அபாயம் நிலவுவது மற்றும் குதிரை பேரம் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.