அதிக வட்டி ஆசை காட்டி பலே மோசடி.. ரூ.32 லட்சத்தை சுருட்டிய கில்லாடி தம்பதி அதிரடியாக கைது!
சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த பாத்திமா எழிலரசி, அவரது கணவர் மரியா லூயிஸ், சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த விஜய், சுந்தரம், கார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் எஃப்எக்ஸ் யோகி அட்வைசர்ஸ் அண்ட் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 4 சதவீத வட்டி தருவதாக கூறி பலரிடம் மோசடி செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு முதல் சிறிய தொகையில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என கூறி, கூடுவாஞ்சேரி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த வக்கீல் அருண்குமார்(42) என்பவரை ஏமாற்றி, சிறுக சிறுக ரூ.32.35 லடம் பெற்றுள்ளார். பின்னர் இரண்டு மாதங்களுக்கு மட்டும் இந்த பணத்திற்கு வட்டி கட்டியுள்ளார். அதன் பிறகு வழங்கப்படவில்லை. அதன் பிறகு அசல் தொகையையாவது தருமாறு கேட்டபோது, மருத்துவ செலவுக்கு எல்லாம் செலவாகிவிட்டதாகவும், தற்போது பணம் இல்லை என்றும் கூறினர். இது தொடர்பாக கூடுவாஞ்சேரி போலீசில் அருண்குமார் புகார் அளித்துள்ளார்.
விசாரணையைத் தொடர்ந்து, மேற்படி மரியா லூயிஸ் மற்றும் அவரது மனைவி பாத்திமா எழிலரசி ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் கார்த்திகேயன், விஜய், சுந்தரம் ஆகியோரை தேடி வருகின்றனர். அதிக லாபம் மற்றும் அதிக வட்டி தருவதாக கூறி மோசடி செய்யும் நிறுவனங்களின் போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் தங்கள் பணத்தை ஏமாற்ற வேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!