லட்சக்கணக்கில் மோசடி... தனியார் பள்ளி மோசடி வழக்கில் தலைமறைவான குற்றவாளியின் உறவினர் வீடுகளில் குற்றப்பிரிவு போலீசார் ரெய்டு!

 
தனியார் பள்ளி மோசடி

அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி தனியார் பள்ளிகளிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த வழக்கில், தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளியின் உறவினர்களுக்குச் சொந்தமான வீடுகளில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

அரசகுமார் தனியார் பள்ளிகள் தலைவர்

அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறித் தனியார் பள்ளிகளிடம் மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய முத்துக்குமார் என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரைத் தேடும் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட நான்கு இடங்களில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர்.

தலைமறைவாக உள்ள முத்துக்குமாரின் உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட இந்தச் சோதனையின்போது, வழக்கிக்குத் தொடர்புடைய மிக முக்கியமான வங்கி ஆவணங்கள் உட்பட மொத்தம் 30 ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அரசகுமார் பள்ளி அங்கீகாரம்

இந்த மோசடி வழக்கில் ஏற்கனவே அரசகுமார், சுரேஷ், ராஜா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையிலும், தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைக் கைது செய்யும் நோக்கத்திலும் காவல்துறையினர் தங்களது விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.