ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டம்? - அமைச்சர் மரிய வில்சன் சொன்ன பதில்!

 
மரிய வில்சன்

சென்னை காசிமேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மரிய வில்சன், ஆண்களுக்கும் இலவச பேருந்து திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

காசிமேடு பழைய ஏலக்கூடம் பகுதியில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மீன் விற்பனைக்கு ஏதுவான புதிய குடையமைப்புப் பணியை ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான மரிய வில்சன் தனது சொந்த நிதியில் அமைத்து ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்தார்.

பெண்கள் மகளிர் பேருந்து பிரியதர்ஷினி

பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கொள்முதல் விவகாரத்தில் திமுக மீது தவெக அரசு குற்றம் சாட்டுவது குறித்துப் பேசிய அவர், தவெக அரசு பொறுப்பேற்ற இந்த 140 நாட்களில் மக்களுக்கு உங்களால் முடிந்த அத்தனை நல்ல திட்டங்களையும் அரசாங்கம் சிறப்பாகச் செய்து வருவதாகத் தெரிவித்தார். நல்லது நடந்தால் திமுக காரணம், தவறு நடந்தால் தவெக அரசு காரணம் என்ற எதிர்க்கட்சிகளின் போரைக் கண்டிப்பதாகவும் கூறினார்.

அரசியல் களத்தில் சத்தியபாமா குறித்து உருவக்கேலி செய்யப்பட்டதாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "அப்பாவுக்கும் மகனுக்கும் பெண்களை கேலி செய்வதுதான் பிழைப்பே" என மிகக் காட்டமாக விமர்சித்தார்.

பேருந்து

அரசுப் பேருந்துகளில் தற்போது பெண்களுக்கு இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுவதைப் போன்று, ஆண்களுக்கும் விரைவில் இலவச பயணச் சலுகை வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இதுகுறித்து மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்குொண்டு செல்வேன்" என அமைச்சர் மரிய வில்சன் பதிலளித்தார்.