தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி... கலெக்டர் அறிவிப்பு!

 
 தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் சார்ஆய்வாளர்கள் (SI) தாலுகா பதவிகளுக்கு 933 பணிக்காலியிடங்களும், ஆயுதப்படை பதவிகளுக்கு 366 காலிப்பணியிடங்களுமென மொத்தம் 1299 பணிக்காலியிடங்களுக்கான தேர்வுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு ஏதாவது இளங்கலை பட்டத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

 தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்கான இலவச பயிற்சி

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிபதற்கான கடைசி நாள் மே 03 ஆம் தேதி. இத்தேர்வுக்கு விண்ணப்பிபதற்கான இணையதள முகவரி https://www.tnusrb.tn.gov.in/ காவல் சார்ஆய்வாளர்கள் (SI) தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் பொருட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகர்கோவிலில் வைத்து 23.04.2025 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் காவல் சார் ஆய்வாளர் (SI) தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்ப நகல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரிந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறும், முதலில் வரும் 100 மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இப்பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டும், SMART BOARD வகுப்புகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பாடக்குறிப்புகள் (Study Material) இலவசமாக வழங்கப்படும். இத்தேர்விற்கு மாணவர்களை தயார் செய்யும் பொருட்டு பாடவாரியாக 25 மாதிரித்தேர்வுகள் நடத்தத்திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளமான https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் இணையதள மாதிரி தேர்வுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!