எல்லாமே ஃப்ரீ தான்... 3 நாட்களுக்கு டேட்டா, அன்லிமிடெட் அழைப்புக்கள் !

 
ஏர்டெல்
  

கேரள மாநிலத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் கொட்டும் மழையிலும் மீட்பு பணிகளை ராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றன. இந்தியா முழுவதும் இருந்து உதவிக்கரங்கள் நீண்டு வரும் வேளையில் 290க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அங்கு இருக்கும்  ஏர்டெல் வாடிக்கையாளர்களில், Validity நிறைவடைந்து ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு அந்நிறுவனம் இலவச அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நிலச்சரிவு

அதன்படி இன்று முதல் அடுத்து  3 நாட்களுக்கு 1ஜிபி டேட்டா மற்றும்  அன்லிமிடெட் கால்,  100 எஸ்.எம்.எஸ் இலவசமாக வழங்கப்படும். Postpaid வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் 30 நாட்களுக்கு நீட்டிப்பு எனவும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

கேரள நிலச்சரிவு


ஏர்டெல் நிறுவனம் கேரளாவில் உள்ள தனது 52 சில்லறை விற்பனைக் கடைகளையும் நிவாரண சேகரிப்பு மையங்களாக மாற்றி வருகிறது. பொதுமக்கள் நிவாரணப் பொருட்களை  வைத்தால்  அவை வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என  ஏர்டெல் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, ஜியோ தகவல் தொடர்பு முக்கியமான தேவையை உணர்ந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் கூடுதல் ஆதரவை வழங்க ஜியோ இரண்டாவது பிரத்யேக கோபுரத்தையும் நிறுவிவருவது குறிப்பிடத்தக்கது.