ரேஷன் கடைகளில் பொங்கலுக்கு 1.77 கோடி இலவச வேஷ்டி, சேலைகள்... அரசாணை வெளியீடு!

 
இலவச வேஷ்டி சேலை

தமிழக அரசு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இலவச சேலை வேஷ்டிகளை வழங்கி வருகிறது. இந்த இலவச வேஷ்டி சேலைகள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலை திட்டத்திற்காக தமிழக அரசு ரூ100கோடி  நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

இலவச வேஷ்டி சேலை

அந்த அரசாணையில் சுமார் 1.77 கோடி சேலை மற்றும் 1.77 கோடி வேஷ்டிகள் தயாரிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பயனாளிகளுக்கு வேட்டி சேலைகள் கிடைப்பதை உறுதி செய்ய விரல் ரேகை பதிவு செய்வது கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலவச வேட்டி, சேலை

இந்த வேட்டி சேலைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தயாரித்து ‌ வழங்கவும்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலவச வேஷ்டி சேலைகள் வழங்கும் நடைமுறையை கண்காணிக்க வருவாய்த்துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web