2 லட்சம் பெண்களுக்கு இலவச ஆடுகள்.. யார் யாருக்கு கிடைக்கும்? - அமைச்சர் கமலி விளக்கம்!

 
அமைச்சர் கமலி

தமிழகத்தில் 'வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்தின்' கீழ் 2 லட்சம் பெண்களுக்கு இலவசமாக ஆடுகள் வழங்கப்படும் எனத் தவெக வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் முதற்கட்டமாக 30,000 பயனாளிகளுக்குத் தலா 5 ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் எஸ். கமலி தெரிவித்துள்ளார்.

ஊரகப் பகுதிகளில் வாழும் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள பெண்கள், ஆதரவற்ற பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும். இலவச ஆடுகள் வழங்குவதற்கான தகுதி அளவுகோல்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் குறித்தான அதிகாரப்பூர்வ வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இனி ஆடு, மாடு சாலைகளில் சுற்றி திரிந்தால் ரூ 10000 அபராதம்!!

நாட்டு மாடு மற்றும் நாட்டுக் கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள மக்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டினக் கால்நடைகளின் எண்ணிக்கையை உயர்த்தும் பொருட்டு, அவற்றைப் பராமரித்து வளர்ப்பதற்கான விரிவான பயிற்சிகள் வழங்கப்படும். இத்திட்டத்துடன் சேர்த்து 30,000 பயனாளிகளுக்கு இலவசக் கறவை மாடுகள் வழங்குதல், பசுந்தீவனத் திட்டம் மற்றும் பட்டா தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இலவச ஆடுகள் வளர்ப்பு மற்றும் அரசு வழங்கும் மானியக் கடன்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள இலவச ஆடுகள் வளர்ப்பு திட்டம் குறித்த இந்த வீடியோவை காணலாம். இந்த காணொளி ஆடு வளர்ப்புத் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் அதற்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளை விரிவாக விளக்குவதால் பயனுள்ளதாக இருக்கும்.