மாஸ்... ஹோலியில் இல்லத்தரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி... இலவச கேஸ் சிலிண்டர்!

 
சிலிண்டர்

 பிரதமர் மோடி சர்வதேச மகளிர் தினத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலையை ரூ100 ரூபாய் குறைத்தார். இந்தியா முழுவதும் உள்ள இல்லத்தரசிகளிடையே பெரும் வரவேர்பை பெற்றது. அதன்படி  இதுவரை ரூ.918 என்ற விலையில் விற்கப்பட்ட சமையல் கேஸ் சிலிண்டர் இனி ரூ.100 குறைக்கப்பட்டு ரூ.818 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  
உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு ஹோலி பண்டிகைக்காக  சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு இலவச சிலிண்டர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளன. ஹோலி பண்டிகையை முன்னிட்டு பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர்களை உத்திர பிரதேச அரசு வழங்கியுள்ளது.  

கேஸ் சிலிண்டர்
ஹோலி பண்டிகையை மேலும் சிறப்பாக்கும் வகையில் உத்திரப்பிரதேச அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  யோகி ஆதித்யநாத் அரசு 2 கோடி உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர்களை வழங்க உள்ளது. 2023 நவம்பரில் இந்த அறிவிப்பு வெளியானது.  அதன்படி, உத்திர பிரதேச அரசு, ஆண்டுக்கு இருமுறை, உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு அதாவது தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகையை ஒட்டி, இந்த பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள சுமார் 2 கோடி குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இத்திட்டத்திற்காக உத்திரப்பிரதேச அரசு ரூ2312 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது . ஹோலி தவிர, தீபாவளிக்கும் முன்னதாகவும், உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர்களையும் அரசாங்கம் வழங்கி வருகிறது.  
அரசின் இலவச சிலிண்டர் திட்டத்தின் பலனை பெற அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

சிலிண்டர்

இத்திட்டத்தின் பலன்களைப் பெற, பயனாளி உஜ்வாலா திட்டத்திற்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும். உத்தரபிரதேசத்தில் வசிக்கும் பயனாளிகளுக்கு மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டு வருகிறது.  அதாவது உத்தர பிரதேச மக்கள் மட்டுமே இந்த திட்டத்தின் பலனைப் பெறுவார்கள்.  இதனைப் பெற   வங்கி கணக்கை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டியது கட்டாயம்.  
பிரதமர் மோடி , 2016ல் மோடி உஜ்வாலா யோஜனா திட்டத்தை தொடங்கினார். இத்திட்டத்தின் கீழ், சிலிண்டர் ஒன்றுக்கு, அரசு ரூ300  மானியமாக வழங்குகிறது. இந்த மானியம் 31 மார்ச் 2025 வரை கிடைக்கும். இந்தத் திட்டத்தில், குடும்பம் ஒரு வருடத்தில் மானிய விலையில் 12 சிலிண்டர்களைப் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் இதுவரை இந்தியா முழுவதும் சுமார்  9 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு இலவச எரிவாயு கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web