இலவச LPG கேஸ் இணைப்பு: உஜ்வாலா திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி? - முழு விபரம்!

 
சிலிண்டர்

பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச எரிவாயு இணைப்பு பெறுவதற்கான எளிய வழிமுறைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

பெண்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு மே 1-ம் நாள் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிலிண்டர்

இத்திட்டத்தின் கீழ் இலவச எல்பிஜி கேஸ் இணைப்பு பெற விரும்பும் தகுதியுள்ள நபர்கள், அதிகாரப்பூர்வ இணையதளமான pmuy.gov.in மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது தங்களது பகுதிக்கு அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கேஸ் விநியோகஸ்தர் மையத்தை நேரடியாக அணுகியும் விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிக்கலாம்.

குடும்பத்தின் பெண் தலைவர் பெயரிலேயே இந்த இணைப்பு வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் உரிய அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சிலிண்டர்

உஜ்வாலா திட்டத்தின் மூலம் எல்பிஜி இணைப்புடன் அடுப்பு மற்றும் முதல் சிலிண்டர் நிரப்பும் வசதி உள்ளிட்ட பலன்கள் தகுதியான ஏழை எளிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.