முதியவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவம்... மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம்!

 
பென்ஷன்
முதியவர் பென்ஷன் மருத்துவம்

மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டமான 'ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா'  திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரையிலான இலவச மருத்துவச் சிகிச்சை வழங்கும் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முதியவர்களின் மருத்துவச் செலவைக் குறைக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள் இணையதளம் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தகுதியுடைய முதியவர்கள் இருக்கும் குடும்பங்களுக்கு, ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை கட்டணமில்லா ரொக்கமில்லா மருத்துவச் சிகிச்சை காப்பீடு வழங்கப்படுகிறது.

முதியோர் பென்ஷன் மூத்த குடிமக்கள்

குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், 70 வயது அல்லது அதற்கு மேற்பட்ட அனைத்து முதியவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் பிரத்யேக அட்டை வழங்கப்பட்டு இந்த இலவச மருத்துவச் சலுகை விரிவுபடுத்தப்படுகிறது.

மத்திய அரசின் இந்த இலவச மருத்துவக் காப்பீட்டுச் சலுகையைப் பெற விரும்பும் முதியவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் எளிதாக விண்ணப்பிக்கலாம்.

தகுதியுள்ள முதியவர்கள் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tms.pmjay.gov.in என்ற முகவரிக்குச் சென்று தங்களது ஆதார் அட்டை மற்றும் வயதுச் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து காப்பீட்டு அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் எனப் பேரிடர் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முதியோர் மூத்த குடிமக்கள் பென்ஷன்

இத்திட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அரசு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுப் பெறும் அறுவை சிகிச்சைகள், மருந்துச் செலவுகள் மற்றும் தீவிர சிகிச்சைகளுக்கு இந்த ரூ. 5 லட்சம் முழுமையாகப் பொருந்தும்.

முதியவர்கள் தங்களது மருத்துவச் செலவுகளுக்காகப் பிறரைச் சார்ந்து இருப்பதைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் சலுகையை, தமிழகத்தில் உள்ள தகுதியான முதியவர்கள் அனைவரும் இணையதளம் மூலம் உடனடியாக விண்ணப்பித்துப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.