இன்று இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி தொடக்கம்.. மெட்ரோ ரயிலில் இலவச பயணம்!

 
மெட்ரோ

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து அணி ஐந்து டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

முதலில் டி20 போtடிகளையும், அதன்பின் ஒருநாள் தொடர் போட்டிகளும் நடைபெறவுள்ளது. முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று ஜனவரி 22ம் தேதி முதல் தொடங்குகிறது.

மெட்ரோ கார்டு

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகள் கொல்கத்தா, புனே, சென்னை, ராஜ்கோட் மற்றும் மும்பை (வான்கடே)   இடங்களில் நடைபெற உள்ளது. அதன்படி, இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

மெட்ரோ

2 வது போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானத்திலும், 3 வது போட்டி ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்திலும் நடைபெறுகிறது. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் ஜனவரி 25ம் தேதி நடக்கும் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டியைக் காண வரும் ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம்  செய்யலாம்என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, போட்டிக்கான டிக்கெட்டை மட்டும் காண்பித்து இலவச பயணத்தை மேற்கொள்ளலாம் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web