பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்: யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம் இதோ!
Sep 26, 2026, 05:35 IST
தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்கள் சுயதொழில் செய்து முன்னேறும் வகையில் “சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்” வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதார ரீதியில் மிகவும் நலிந்த பிரிவைச் சார்ந்த பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் ஆண்கள், அத்துடன் சமூக ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் இந்தத் திட்டத்தின் கீழ் இலவசத் தையல் இயந்திரம் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் தகுதியான நபர்கள், தங்களுக்கு அருகிலுள்ள இ-சேவை மையம் மூலமாகத் தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
