வந்தே பாரத் ரயிலில் மாணவர்களுக்கு இலவச பயணம்!! அதிரடி அறிவிப்பு!!

 
வந்தே பாரத்


இந்தியா முழுவதும் அதிவேக ரயில்களாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.  இந்த ரயில் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. வந்தே பாரத் ரயில் இந்தியாவின்  பல்வேறு பகுதிகளில்  பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெற்று வருகிறது. வந்தே பாரத் ரயில் குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்திக்குறிப்புஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  சரஸ்வதி வித்யா மந்திர் மாணவர்கள் 50 பேர் போட்டியின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள், அவர்களுக்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். கட்டாக்கில் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி கட்டும் முன் பூமி பூஜையின் போது அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.

வந்தே பாரத்

 ‘வந்தே பாரத் ரயிலை மாணவர்கள் பார்த்ததும் அதில் பயணிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்குள் எழுந்து விட்டது. இந்த போட்டிகளில் இருந்து  50 மாணவர்கள் போட்டி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.  தொடர்ந்து பேசிய அவர், புகழ்பெற்ற புவனேஸ்வர் ராஜ்தானி ரயிலுக்கு நாளை முதல் புதிய ‘தேஜாஸ்’ ரேங்க் கிடைக்கும். ரயில்   பயணிகளுக்கு மிகச் சிறந்த வசதிகளை வழங்க வேண்டும் என்பது   மோடியின் தொலைநோக்கு பார்வை என தெரிவித்துள்ளார்.

வந்தே பாரத்

அத்துடன்   ஒடிசாவில் மொத்தம் 25 ரயில் நிலையங்களை  அம்ருத் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் 508 ரயில் நிலையங்களை தேசிய தலைநகரில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் மறுவடிவமைப்பு செய்ய   மோடி அடிக்கல் நாட்டினார்.  இந்த வீடியோ கான்பரன்சிங்கில் பல மாநிலங்களில் இருந்தும் பல மத்திய அமைச்சர்கள் மற்றும் முதல்வர்கள்,  ஆளுநர்கள் அந்தந்த மாநிலங்களில் இருந்து அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின்படி, ஒடிசாவைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் வந்தே பாரத் ரயிலில் இலவசமாகப் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளார். அவருடைய இந்த அறிவிப்பு மாணவர்களிடையே பெரும் உத்வேகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web