பிரபல நடிகர் கருணை மரணம்... மருத்துவ வேதனையை தாங்க முடியாமல் அதிர்ச்சி!

 
டேவிஸ்

 

பிரபல பிரெஞ்சு நடிகரும் நாடக இயக்குநருமான ஆர்னாட் டெனிஸ், நீண்டகாலமாக நீடித்த கடுமையான உடல்நலப் பாதிப்புகளுக்கு மத்தியில் 43 வயதில் பெல்ஜியத்தில் கருணை மரணம் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாரீசில் பிறந்த ஆர்னாட் டெனிஸ், பிரெஞ்சு நாடக உலகில் நடிகர், எழுத்தாளர் மற்றும் இயக்குநராக அறியப்பட்டவர். 2003-ம் ஆண்டு ‘Les Compagnons de la Chimère’ என்ற நாடகக் குழுவை தொடங்கி பல ஆண்டுகள் அதனை வழிநடத்தினார். ‘Marie des Poules’, ‘Mademoiselle Molière’, ‘Les Liaisons dangereuses’ உள்ளிட்ட நாடகங்களின் மூலம் கவனம் பெற்றார். ‘Marie des Poules’ நாடகத்துக்காக மொலியர் விருதும் கிடைத்தது.

2023-ம் ஆண்டு ஜூலை மாதம் வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட குடலிறக்கத்துக்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, polypropylene பொருளால் செய்யப்பட்ட implant பொருத்தப்பட்டது. அதன் பின்னர் கடுமையான வலி, செரிமானப் பிரச்சினைகள், உடல் எடை குறைவு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில், அந்த implant அகற்றப்பட்டாலும் தனது உடல்நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படவில்லை என்று ஆர்னாட் டெனிஸ் கூறியிருந்தார். பின்னர் தனது உடல்நலப் பிரச்சினைகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்த அவர், இதேபோன்ற பாதிப்புகளை எதிர்கொண்டவர்களுக்காக ஒரு குழுவையும் உருவாக்கினார்.

FRENCH ACTOR MAKES LIFE-AND-DEATH DECISION French actor and theater director Arnaud Denis died by euthanasia in Belgium on Sept. 22 at age 43, following years of severe health complications after undergoing hernia

இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைகள் மூலம் தனது நிலை மேம்பட வாய்ப்பில்லை எனக் கருதிய ஆர்னாட் டெனிஸ், பெல்ஜியத்தில் கருணை மரணம் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவர் மார்ச் மாதம் முதல் பெல்ஜியத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

செப்டம்பர் 22 அன்று பெல்ஜியத்தின் நாமூர் நகரில் மூன்று மருத்துவர்களுடன் ஆலோசித்த பின்னர் ஆர்னாட் டெனிஸ் கருணை மரணம் பெற்றதாக அவரது வழக்கறிஞர் பிலிப் கோர்டுவா தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக அவர் அனுபவித்து வந்த கடுமையான வலியே இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.இறப்பதற்கு முன்பு ஆர்னாட் டெனிஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நீண்ட பதிவை வெளியிட்டு தனது உடல்நலப் போராட்டம் மற்றும் மருத்துவ அனுபவங்கள் குறித்து எழுதியிருந்தார். அவரது மறைவு பிரெஞ்சு நாடக உலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.