2 ஆண்டுகளில் முழு விமானத்தையே தின்று தீர்த்த பிரான்ஸ் மனிதர்!

 
ராபின்

 

பிரான்ஸ் நாட்டின் கிரெனோபில் நகரைச் சேர்ந்த மைக்கேல் லோடிடோ, சாதாரண மனிதர்களால் கற்பனை கூட செய்ய முடியாத விசித்திர உணவுப் பழக்கத்தால் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தவர். தனது 16-வது வயது முதலே பொது மேடைகளில் உலோகம், கண்ணாடி மற்றும் ரப்பர் போன்ற பொருட்களை உண்ணும் சாகச நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

The man who ate metal: Monsieur Mangetout's strange diet | Guinness World Records

இதன் உச்சகட்டமாக, கடந்த 1978-ம் ஆண்டு ஒரு முழு செஸ்னா 150 விமானத்தைச் சாப்பிடும் முயற்சியைத் தொடங்கிய அவர், 1980-ம் ஆண்டிற்குள் அதை முழுவதுமாகத் தின்று முடித்தார். விமானத்தை ஒரே நேரத்தில் விழுங்காமல், அதன் பாகங்களை ஆயிரக்கணக்கான சிறிய துண்டுகளாக வெட்டி, மினரல் ஆயில் மற்றும் தண்ணீருடன் சேர்த்துச் சிறிது சிறிதாக உட்கொண்டார்.

The Man Who Ate an Airplane” sounds unreal—but it's true 🤯✈️ In the late 1970s, a French entertainer named Michel Lotito—also known as “Monsieur Mangetout” or “Mr. Eat-All”—became famous for doing

இவருக்கு உணவு அல்லாத பொருட்களை உண்ணும் பிக்கா என்ற அரிய நிலை இருந்ததாகவும், அவரது வயிற்றின் உட்சுவர் சாதாரண மனிதர்களை விட இரண்டு மடங்கு தடிமனாக இருந்ததாகவும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். வாழ்நாளில் சுமார் 9 டன் உலோகத்தைச் சாப்பிட்ட மைக்கேல் லோடிடோ, 2007-ம் ஆண்டு தனது 57-வது வயதில் காலமானார்.