பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி... வெளியேறினார் ரஃபேல் நடால்!

 
ரஃபேல் நடால்

பாரிஸில் நடந்து வரும் நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்திலே அதிர்ச்சியளிக்கும் விதமாக தோல்வியை தழுவி ரஃபேல் நடால் வெளியேறியுள்ளார்.
பிரெஞ்சு ஓபன் தொடரில், ரஃபேல்நடால் இப்படி முதல் சுற்றோடு வெளியேறுவது இதுவே முதல்முறை என்பதால் டென்னிஸ் விளையாட்டு ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நடால் பிரெஞ்சு ஓபன் தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 



37 வயதான நடால், இதுவரை ஆடவர் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில் 14 பட்டங்கள் பிரெஞ்சு ஓபன் தொடரில் வென்றவை.  
இதற்கு முன்னர் பிரெஞ்சு ஓபன் தொடரில் ஜோகோவிச் மற்றும் ராபின் ஆகிய இருவர் மட்டுமே நடாலை வீழ்த்தி இருந்த நிலையில், தற்போது 3வது நபராக அந்தப் பட்டியலில் ஸ்வெரேவ் இணைந்துள்ளார்.