“அடிக்கடி தகுந்த காரணமின்றி மனைவி தாய் வீட்டிற்குச் செல்வது கொடுமைக்குச் சமம்” - உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

 
காதல் நீதிமன்றம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு தம்பதி விவாகரத்து

முறையான மற்றும் தகுந்த காரணங்கள் இன்றி, ஒரு மனைவி மீண்டும் மீண்டும் திருமணமான வீட்டை விட்டு வெளியேறித் தனது தாய் வீட்டிலேயே சென்று தங்குவது கணவருக்கு இழைக்கப்படும் மனக்கொடுமைக்குச் சமம் என்று சென்னை உயர் நீதிமன்றம் முக்கியக் கருத்து தெரிவித்துள்ளது.

கணவர் தனது வயதான பெற்றோரைப் பராமரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த போதிலும், மனுதாரரான மனைவி தன்னைத் தனிக்குடித்தனம் அழைத்துச் செல்லுமாறு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். மனைவியின் வற்புறுத்தலால் வேறு வழியின்றி கணவரும் தனது சொந்த வீட்டின் அருகிலேயே தனியாக வீடு எடுத்துக் குடியேறியுள்ளார்.

உயர்நீதிமன்றம்

புதிய வீட்டிலும் தங்காமல் மனைவி தொடர்ச்சியாகக் காரணமின்றித் தனது தாய் வீட்டிற்கே அடிக்கடி சென்று தங்கியுள்ளார். இதனால் கணவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி, குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்து வெற்றியும் பெற்றார்.

குடும்ப நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனைவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஆஷா தலைமையிலான அமர்வு, மனைவியின் இத்தகைய தொடர் செயலானது கணவரின் மனதில் நிலையற்ற தன்மையையும் பாதுகாப்பின்மை உணர்வையும் ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

கள்ளக்காதல் உல்லாசம் காதல் தம்பதி ஹனி ட்ராப்

கணவன்-மனைவி உறவு என்பது பரஸ்பர அன்பும் விட்டுக்கொடுப்பும் நிறைந்ததாக இருக்க வேண்டும். மாறாக, எப்போது தன் மனைவி தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிடுவாரோ என்ற அச்சத்திலேயே கணவரை வாழ வைக்கும் இத்தகைய நடவடிக்கைகள் மனக்கொடுமைக்கு ஒப்பானவை என்று தெரிவித்து, மனைவியின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.