நண்பேண்டா... விஜய்க்காக களமிறங்கிய நடிகர் சஞ்ஜீவ்- பெரம்பூரில் அனல் பறக்கும் பிரச்சாரம்!

 
ரஞ்சித் ரஞ்சித்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களத்தில் முதன்முறையாகத் தடம் பதித்துள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது பிரசாரத்தை மின்னல் வேகத்தில் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் தாமுவை ஆதரித்து, நடிகர் சஞ்ஜீவ் இன்று களம் இறங்கினார்.

சின்னத்திரை மற்றும் திரையுலகில் பிரபலமானவரும், தவெக தலைவர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான நடிகர் சஞ்ஜீவ், நேற்று ராயபுரம் தொகுதியிலும், விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியின் முக்கிய வீதிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்தார். பெரம்பூரின் குறுகலான சந்துகள் முதல் பிரதான சாலைகள் வரை மக்களிடையே நேரில் சென்று அவர் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

தவெக விஜய்

தவெக-வின் கொள்கைகள் மற்றும் வேட்பாளர் தாமுவின் மக்கள் பணிகள் குறித்து எடுத்துக்கூறி, 'வெற்றிச் சின்னத்திற்கு' வாக்களிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார். சஞ்ஜீவ் வருகையை முன்னிட்டு தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பெருமளவில் திரண்டனர். இதனால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

பாரம்பரிய அரசியல் கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் சென்னை பெரம்பூர், ராயபுரம் பகுதிகளில் தவெக-வின் இந்த அதிரடிப் பிரசாரம் மற்ற வேட்பாளர்களிடையே ஒருவிதப் படபடப்பை ஏற்படுத்தியுள்ளது.