பேண்ட்டை ஊசியால் தைத்து கிண்டல் செய்த நண்பர்கள்.. விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

 
ஷகில்

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள பணகஜே பகுதியில் முகமது ஷாகிப் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஷகில் (21) நேற்று பிலதங்குடி நகருக்கு சென்றார். அப்போது மாடர்ன் ஸ்டைலில் உடை அணிந்திருந்தார். வெள்ளை நிற டி-சர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்தார். சில இடங்களில் ஜீன்ஸ் கிழிந்திருந்தது. இவர் சந்தைக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றிருந்தார்.


அப்போது, ​​லைலா கிராமத்தைச் சேர்ந்த சபீர், அனிஷ், பாப் ஜான் சாஹிப் ஆகியோர் ஷகிலை தடுத்து நிறுத்தி, இதுபோன்ற நவீன ஜீன்ஸ் அணிய வேண்டாம் என அறிவுறுத்தினர். அப்போது அவர்களுக்குள் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சபீர் உள்ளிட்ட 3 பேரும் ஷகிலை பிடித்து கடையில் ஊசி, சணல் வாங்கி ஜீன்ஸை தைத்தனர். இது தொடர்பான வீடியோவையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

மனமுடைந்த ஷகில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மேல் சிகிச்சைக்காக மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web