நண்பனின் மனைவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை - தலைமறைவான குற்றவாளிகளுக்குத் வலைவீச்சு!
Oct 18, 2026, 18:10 IST
மும்பை அருகே உள்ள விரார் பகுதியில், கணவரின் நண்பர்கள் இருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விரார் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் தனது 4 வயது மகனுடன் வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது கணவரின் நண்பர்கள் இருவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது அவர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இருவரும், குழந்தையைக் கொன்றுவிடுவதாக மிரட்டிப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாகியுள்ள அந்த இரு குற்றவாளிகளையும் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
