இறப்பிலும் பிரியாத நண்பர்கள்... ஒன்றாக நடந்த இறுதி சடங்கு... ஊரே திரண்டு வந்து அஞ்சலி!

 
சிவராமகிருஷ்ணன்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தலையாமங்கலம் பகுதியில் சிவராமகிருஷ்ணன் (80) மற்றும் ராமலிங்கம் (82) ஆகிய இருவர் வசித்து வந்தனர். இருவரும் சிறு வயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். மன்னார்குடியில் இருவரும் ஒன்றாக பள்ளி படிப்பை முடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தில் ஒரே அறையில் தங்கி இருவரும் பாலிடெக்னிக் படிப்பை முடித்துள்ளனர்.

மன்னார்குடியில் இருவரும் ஒன்றாக பள்ளி படிப்பை முடித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினத்தில் ஒரே அறையில் தங்கி இருவரும் பாலிடெக்னிக் படிப்பை முடித்துள்ளனர். ஆண்டுகள் பல ஓடிய பிறகும், சிறுசிறு சண்டைகளைக் கடந்தும் அவர்களின் நட்பு பெரும் பினைப்புடன் இன்றளவும் தொடர்ந்தது.

சிவராமகிருஷ்ணன்

அந்த கிராமம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதி மக்களே ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்களின் நட்பு இருந்தது. இதில், சிவராமகிருஷ்ணனுக்கு மனைவி, இரண்டு மகன், ஒரு மகளும், ராமலிங்கத்திற்கு மனைவி மற்றும் இரண்டு மகன், இரண்டு மகள்களும் உள்ளனர். 

இருவரும் மன்னார்குடி அருகே உள்ள மத்திய அரசு நிறுவனத்தில் ஒன்றாக வேலைக்கு சேர்ந்தனர். அதன் பின்னர் சிவராமகிருஷ்ணன், ராமலிங்கம் ஒரே நாளில் பணி ஓய்வும் பெற்றுள்ளனர். அடிக்கடி குடும்பத்துடன் சேர்ந்து சுற்றுலா சென்று வந்துள்ளனர். இந்நிலையில், சிவராமகிருஷ்ணன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்துள்ளார். 

சிவராமகிருஷ்ணன்

இந்நிலையில், உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், சிவராமகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார். நண்பர் உயிரிழந்த தகவலை கேட்ட ராமலிங்கம் பெரும் சோகத்தில் மூழ்கினர். மேலும் அடுத்த சில நிமிடங்களில் ராமலிங்கம் அதே இடத்தில் மயங்கிய நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இவர்களது இறுதிச் சடங்கும் ஒன்றாக நடைபெற்றது. இறப்பிலும் இணை பிரியாமல் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இறுதி சடங்கில்,  மொத்த ஊரே திரண்டு வந்து இருவருக்கும் அஞ்சலி செலுத்தி, அவர்களது நட்பைப் போற்றினார்கள்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்