அஸ்வினி முதல் ரேவதி வரை... இந்த மாதத்தில் எந்தெந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட யோகம்... முழு பலன்கள்!
மேஷம்
அஸ்வினி: தவிர்க்க முடியாத சுபச் செலவுகள் உண்டாகும். முக்கியப் பிரமுகர்களின் சந்திப்பு எதிர்காலத்திற்கு நல்ல அஸ்திவாரமாக அமையும். கூட்டுத் தொழில் மூலம் லாபம் கிடைக்கும்.
பரணி: ஆரோக்கியம் சீராக இருக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் உழைப்பிற்கு ஏற்ற வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகளைத் தன்னம்பிக்கையால் முறியடிப்பீர்கள்.
கார்த்திகை (1-ஆம் பாதம்): பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும், மருத்துவ மற்றும் வீண் விரயச் செலவுகள் வரக்கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
ரிஷபம்
கார்த்திகை (2, 3, 4-ஆம் பாதங்கள்): பிரிந்த உறவினர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். புதிய தொழில் ஒப்பந்தங்கள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ரோகிணி: அத்தியாவசியத் தேவைகளுக்குச் நிதிப் பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் விடாமுயற்சியால் அனைத்துப் பிரச்சினைகளையும் சமாளிப்பீர்கள்.
மிருகசீரிஷம் (1, 2-ஆம் பாதங்கள்): எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்களை அளவுக்கு அதிகமாக நம்ப வேண்டாம். எச்சரிக்கையும் நிதானமும் அவசியம்.
மிதுனம்
மிருகசீரிஷம் (3, 4-ஆம் பாதங்கள்): சில காரியங்கள் தாமதமானாலும், இறுதியில் சாதகமாக முடியும் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.
திருவாதிரை: மற்றவர்களின் வார்த்தைகளை நம்புவதில் குழப்பம் வரலாம். ராசிநாதனின் பலத்தால் பெரிய பாதிப்புகள் இன்றித் தப்பிப்பீர்கள்.
புனர்பூசம் (1, 2, 3-ஆம் பாதங்கள்): குடும்பப் பிரச்சினைகள் மறையும். திருமணம் போன்ற சுபகாரியங்களில் சிறு தாமதம் ஏற்படலாம். வாக்கு கொடுக்கும் முன் யோசிப்பது நல்லது.
கடகம்
புனர்பூசம் (4-ஆம் பாதம்): உடமைகள் மீது கவனம் தேவை; பொருட்கள் திருட்டு போக வாய்ப்புள்ளது. புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
பூசம்: வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தகுந்த வரன் அமைந்து திருமணம் கூடிவரும். வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
ஆயில்யம்: தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டித் தேர்வுகள் சாதகமாக அமையும். மேற்படிப்புக்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்
மகம்: மூலதனத்திற்குத் தேவையான பணவரவு இருக்கும். நற்பெயர் கிடைக்கும். எதிரிகள் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாகச் செயல்படவும்.
பூரம்: கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து நல்ல முன்னேற்றம் காணப்படும். பிறமொழி பேசுபவர்களால் நன்மைகள் ஏற்படும்.
உத்திரம் (1-ஆம் பாதம்): வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். கன்சல்டன்சி மற்றும் கல்வித்துறையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.
கன்னி
உத்திரம் (2, 3, 4-ஆம் பாதங்கள்): குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். புதிய வேலைவாய்ப்புகள் அமையும்.
அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் சிரமம் ஏற்படலாம். பிள்ளைகள் விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
சித்திரை (1, 2-ஆம் பாதங்கள்): தம்பதியிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். புதிய வீடு, மனை வாங்கும் எண்ணம் ஈடேறும்.
துலாம்
சித்திரை (3, 4-ஆம் பாதங்கள்): நெருங்கிய நண்பர்களைப் பிரிய நேரிடலாம். உடமைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும். யோகா, தியானம் மன அமைதியைத் தரும்.
சுவாதி: தாய்மாமனுடன் கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உத்தியோகத்தில் கூடுதல் உழைப்பு தேவைப்படும்.
விசாகம் (1, 2, 3-ஆம் பாதங்கள்): கடன் சுமை குறையும்; நோய்கள் விலகி ஆரோக்கியம் மேம்படும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். தொழிலதிபர்களுக்கு நல்ல வரவு உண்டு.
விருச்சிகம்
விசாகம் (4-ஆம் பாதம்): புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மனைவி வழியில் சொத்துகள் சேரும். வியாபாரத்தில் போட்டிகள் விலகி லாபம் பெருகும்.
அனுஷம்: உத்தியோகஸ்தர்களுக்கு விருப்பமான இடமாறுதல் கிடைக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். ஒதுக்கியவர்களே தேடி வருவார்கள்.
கேட்டை: கூடுதல் உழைப்பால் கூடுதல் வருமானம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக இருந்த உடல் உபாதைகள் நீங்கும்.

தனுசு
மூலம்: நீண்ட நாள்களாக இருந்த வந்த நோய்கள் குணமடையும். அரசுப் பணியாளர்கள் சக ஊழியர்களிடமும் மேலதிகாரிகளிடமும் கவனமாக இருக்க வேண்டும்.
பூராடம்: வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
உத்திராடம் (1-ஆம் பாதம்): தம்பதியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒன்று சேர்வார்கள். தொழிலதிபர்களுக்கு உற்பத்தியும் லாபமும் அதிகரிக்கும்.
மகரம்
உத்திராடம் (2, 3, 4-ஆம் பாதங்கள்): வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் இருந்தாலும் சமாளித்து லாபம் காண்பீர்கள். பிரிந்திருந்த பிள்ளைகள் மீண்டும் குடும்பத்துடன் சேர்வார்கள்.
திருவோணம்: விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். தங்க நகை வியாபாரிகளுக்கு நல்ல லாபம் உண்டு. இளைஞர்களுக்குப் புதிய வேலை கிடைக்கும்.
அவிட்டம் (1, 2-ஆம் பாதங்கள்): திருமண வரன்களை நன்கு ஆராய்ந்து முடிவெடுக்கவும். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலம் லாபம் பெருகும்.
கும்பம்
அவிட்டம் (3, 4-ஆம் பாதங்கள்): பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும். சோதனைகள் வெற்றியாக மாறும்.
சதயம்: தொட்ட காரியங்கள் அனைத்தும் கைகூடும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் கூடும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
பூரட்டாதி (1, 2, 3-ஆம் பாதங்கள்): கல்வியில் புதிய மாற்றங்கள் ஏற்படும். அரசாங்க வழி அனுகூலம் உண்டு. வாகனங்களில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை.
மீனம்
பூரட்டாதி (4-ஆம் பாதம்): பணப்புழக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதூகலமும் நிலவும்.
உத்திரட்டாதி: எதிலும் சிறு ஆதாயம் கிடைக்கும். ஆன்மீக மற்றும் தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். எந்திரங்களில் பணிபுரிபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ரேவதி: தொழிலில் பெரிய சிக்கல்கள் இருக்காது. அடுத்தவர் விஷயங்களில் வீணாகத் தலையிட வேண்டாம். அளவோடு நடந்து கொண்டால் சிரமங்களைத் தவிர்க்கலாம்.
