சிப்ஸ், பிஸ்கட், கேக் துவங்கி சோப்பு, க்ரீம் வரை.. பல பொருட்களின் விலை உயரும் அபாயம் - காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

 
ஹார்முஸ் எண்ணெய் ஹார்முஸ் எண்ணெய்

ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றத்தால் எரிபொருள் விலை உயரும் என்ற அச்சம் நிலவும் சூழலில், தற்போது பாமாயில் பற்றாக்குறை குறித்த புதிய கவலை இந்தியாவுக்கு எழுந்துள்ளது. உலகிலேயே பாமாயிலை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில், இந்தத் தட்டுப்பாடு சாமானிய மக்களின் பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் ஆண்டு பாமாயில் தேவை சுமார் 9.5 மில்லியன் டன். ஆனால், உள்நாட்டு உற்பத்தி வெறும் 4 லட்சம் டன்னுக்கும் குறைவாகவே உள்ளது. இதனால், நமது தேவையைப் பூர்த்தி செய்ய இந்தோனேசியா மற்றும் மலேசியா நாடுகளையே இந்தியா முழுமையாகச் சார்ந்துள்ளது.

வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்

இந்தோனேசியா தனது டீசலில் 40% வரை பாமாயிலைக் கலந்து பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அதேபோல் மலேசியாவும் பி15, பி20 போன்ற திட்டங்களைச் செயல்படுத்தத் தயாராகி வருகிறது. ஏற்றுமதி செய்வதை விட, தங்கள் நாட்டு எரிபொருள் தேவைக்காகப் பாமாயிலைப் பயன்படுத்த அந்த நாடுகள் முன்னுரிமை அளிக்கின்றன.

இந்தியாவில் சமையல் எண்ணெய் சந்தையில் 40% பங்கு பாமாயிலுக்கு உள்ளது. இதன் விலை குறைவாகவும், நீண்ட நாள் கெடாமலும் இருப்பதால்  சிப்ஸ், பிஸ்கட், கேக், சமோசா, பேக்கரி பொருட்கள் மற்றும் இன்ஸ்டன்ட் உணவுகள், சோப்பு, கிரீம் மற்றும் லோஷன் வகைகள் போன்ற பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும்.

பிஸ்கட் பாக்கெட்டில் கஞ்சா!! காவல்துறையின் அதிரடி நடவடிக்கை…..!!

கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ஹோர்மோஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் போர் பதற்றத்தால் கப்பல் போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளது. பாமாயில் வரத்து குறையும்போது, மற்ற சமையல் எண்ணெய்களின் விலையும் சரிசமமாக உயர வாய்ப்புள்ளது.

பாமாயில் என்பது வெறும் சமையல் எண்ணெய் மட்டுமல்ல, அது பல தொழில்துறைகளின் அடிப்படைத் தேவையாக இருப்பதால், இந்த நெருக்கடி இந்தியச் சந்தையில் ஒரு சங்கிலித் தொடர் விலை உயர்வுக்கு (Inflation) வழிவகுக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.