சிலிண்டர் முதல் ஏடிஎம் கட்டணங்கள், ஐடிஆர் வரை... செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் 5 முக்கிய மாற்றங்கள்!

 
செப்டம்பர்

செப்டம்பர் 1ம் தேதி முதல் பொதுமக்களின் அன்றாட செலவுகள், வங்கி சேவைகள், வரி தாக்கல் மற்றும் சர்வதேச பயணங்களில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.

1. எல்.பி.ஜி இ-கேஒய்சி காலக்கெடு

எல்.பி.ஜி சிலிண்டர் கேஸ் இணைப்புக்கான ஆதார் அடிப்படையிலான e-KYC சரிபார்ப்பை முடிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் e-KYC செய்யப்படாவிட்டால், சமையல் எரிவாயு சிலிண்டருக்கான அரசு மானியம் மற்றும் மானிய விலையிலான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.

ஐடிஆர்

2. வெளிநாட்டுப் பயணிகளுக்குப் போர்டிங் பாஸ் முத்திரை நீக்கம்

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானப் பயணிகளுக்கு, குடிவரவு (Immigration) கவுண்டர்களில் போர்டிங் பாஸ்களில் பிஸிக்கல் முத்திரை குத்தும் முறை செப்டம்பர் 1 முதல் ரத்து செய்யப்படுகிறது. பயணிகள் தங்களது டிஜிட்டல் அல்லது அச்சிடப்பட்ட போர்டிங் பாஸைக் காட்டி விரைவாக குடிவரவுப் சோதனையை நிறைவு செய்ய முடியும்.

3. எல்.பி.ஜி விலை, ஏடிஎம் கட்டணங்கள் & ஏடிஎஃப்  

வழக்கம்போல செப்டம்பர் 1-ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் வணிக மற்றும் வீட்டு உபயோக எல்.பி.ஜி சிலிண்டர்களின் புதிய விலையை அறிவிக்கும். சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விமான எரிபொருள் கட்டணங்கள், வங்கியின் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணங்கள் மற்றும் கிரெடிட் கார்டு விதிகளிலும் மாற்றங்கள் வர வாய்ப்புள்ளது.

4. வருமான வரி ரிட்டர்ன் தாக்கல்

வணிகம் மற்றும் தொழில் மூலம் வருமானம் ஈட்டி, கணக்குத் தணிக்கை (Audit) செய்யத் தேவையில்லாத தனிநபர்கள் (AY 2026-27) தங்கள் ஐ.டி.ஆரை (ITR-3, ITR-4) ஆகஸ்ட் 31-க்குள் தாக்கல் செய்ய வேண்டும். தவறவிட்டால் அபராதத்துடன் கூடிய காலதாமதக் கட்டணம் வசூலிக்கப்படும்.

செப்டம்பர்

5. வங்கி வைப்புத் தொகை வட்டி விதிகள்

இந்தியன் வங்கி (444, 555 நாட்கள்) மற்றும் ஐடிபிஐ வங்கி (444, 555, 700 நாட்கள்) வழங்கி வரும் அதிக வட்டி தரும் சிறப்பு எஃப்.டி திட்டங்களின் காலக்கெடு செப்டம்பருடன் நிறைவடைகிறது. வங்கிகளில் ₹3 கோடிக்கு மேல் செய்யப்படும் பெரிய டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை தினமும் காலை 10:10 மணிக்கு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்ற புதிய விதி அறிவிக்கப்பட்டுள்ளது (இது அக்டோபர் 1 முதல் அமலாகிறது).