ஜேப்பியாரின் மருமகன் முதல் தவெக நிதியமைச்சர் வரை - யார் இந்த மரிய வில்சன்?
பிரபல கல்வியாளர் மறைந்த ஜேப்பியாரின் மருமகனான மரிய வில்சன், தமிழக அரசியலிலும் கல்வித் துறையிலும் முக்கியமான ஒரு நபராகக் கவனத்தைப் பெற்றுள்ளார். மரிய வில்சன் பி.டெக்., எம்.பி.ஏ. பட்டங்களைப் பெற்றவர். மேலும் மேலாண்மை அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். மறைந்த கல்வியாளரும் தொழிலதிபருமான ஜேப்பியாரின் மகள் ரெஜினாவைத் திருமணம் செய்துள்ளார்.

ஜேப்பியார் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்து திறம்படச் செயல்படுத்திய அனுபவம் கொண்டவர். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய்யின் நம்பிக்கைக்குரிய நிர்வாகிகளில் ஒருவராக விளங்கும் மரிய வில்சன், அக்கட்சியின் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டுப் பணியாற்றி வருகிறார்.
"முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்குத் தூணாக ஜேப்பியார் இருந்தது போல, தளபதி விஜய்க்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்" என்று அவர் கூறிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளானது.
