மு.க.ஸ்டாலின் முதல் விஜய் வரை... 27 தொகுதிகள் 'வி.ஐ.பி' அந்தஸ்து! - யார் யாருக்குப் போட்டி? முழுமையான பட்டியல் இதோ!

 
விஜபி வேட்பாளர் விஜபி வேட்பாளர்

தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக நான்கு முனைப் போட்டி நிலவும் இந்தத் தேர்தலில், வி.ஐ.பி. தொகுதிகள் ஒவ்வொன்றும் கௌரவப் போராட்டக் களமாக மாறியுள்ளன.

தலைவர்கள் களம் காணும் முக்கியத் தொகுதிகள் எவை எவை என்கிற லிஸ்ட் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இந்த 27 தொகுதிகள் விஐபி தொகுதிகளாக, யாருக்கு வெற்றி வாய்ப்பு என்கிற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

1. கொளத்தூர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (தி.மு.க) மீண்டும் களம் காண்கிறார். இவரை எதிர்த்து அ.தி.மு.க-வின் சந்தானகிருஷ்ணன், த.வெ.க-வின் வி.எஸ்.பாபு மற்றும் நா.த.க-வின் சவுந்திரபாண்டியன் லூடர் சேத் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

2. எடப்பாடி: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க) தனது கோட்டையான எடப்பாடியில் போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் காசி, த.வெ.க சார்பில் அருண்குமார் மற்றும் நா.த.க சார்பில் பிரியதர்சினி ஆகியோர் களம் காண்கின்றனர்.

3. பெரம்பூர்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் களம் காணும் முதல் தொகுதி. இங்கு தி.மு.க-வின் ஆர்.டி.சேகர், பா.ம.க-வின் திலகபாமா மற்றும் நா.த.க-வின் வெற்றித்தமிழன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

4. திருச்சி கிழக்கு: நடிகர் விஜய் போட்டியிடும் இரண்டாவது தொகுதி இதுவாகும். இங்கு தி.மு.க-வின் இனிகோ இருதயராஜ், அ.தி.மு.க-வின் க.ராஜசேகரன் மற்றும் நா.த.க-வின் கிருஷ்ணசாமி ஆகியோர் மோதுகின்றனர்.

5. காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்துச் சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி (காங்கிரஸ்), தேர்போகி பாண்டி (அ.ம.மு.க) மற்றும் த.வெ.க-வின் பிரபு ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.

விஐபி

6. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் (தி.மு.க) மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.க-வின் ஆதிராஜாராம் மற்றும் த.வெ.க-வின் டி.செல்வம் ஆகியோர் முக்கியப் போட்டியாளர்களாக உள்ளனர்.

7. போடிநாயக்கனூர்: தி.மு.க-வில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அ.தி.மு.க-வின் வி.டி.நாராயணசாமி இவரை எதிர்க்கிறார்.

8. மயிலாப்பூர்: பா.ஜ.க-வின் மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். தி.மு.க-வின் தா.வேலு இவருடன் மோதுகிறார்.

9. விருத்தாசலம்: தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் களம் காண்கிறார். பா.ம.க சார்பில் டாக்டர் தமிழரசி ஆதிமூலம் போட்டியிடுகிறார்.

10. தர்மபுரி: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.

11. விருதுநகர்: தே.மு.தி.க தலைவர் பிரேமலதாவின் மகன் விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.

12. சாத்தூர்: தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் களம் காண்கிறார்.

விஜய் வேட்புமனு

13. கோவை வடக்கு: பா.ஜ.க-வின் வானதி சீனிவாசன் மீண்டும் போட்டியிடுகிறார்.

14. மதுரை மத்தி: நடிகர் மற்றும் இயக்குநர் சுந்தர் சி (புதிய நீதிக்கட்சி) போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க-வின் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் களம் காண்கிறார்.

15. அவினாசி (தனி): மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் (பா.ஜ.க) போட்டியிடுகிறார்.

16. ஸ்ரீபெரும்புதூர் (தனி): தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை களம் காண்கிறார்.

17. தியாகராய நகர்: த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் போட்டியிடுகிறார். அ.தி.மு.க-வின் தி.நகர் சத்தியா இவரை எதிர்க்கிறார்.

18. வில்லிவாக்கம்: த.வெ.க-வின் ஆதவ் அர்ஜூனா களம் காண்கிறார்.

19. திரு.வி.க நகர் (தனி): மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி (அ.தி.மு.க) போட்டியிடுகிறார்.

20. காட்பாடி: தி.மு.க-வின் மூத்த அமைச்சர் துரைமுருகன் மீண்டும் போட்டியிடுகிறார்.

21. திருச்செங்கோடு: கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் போட்டியிடுகிறார்.

22. நாகப்பட்டினம்: ம.நே.ம.க தலைவர் ஜவாஹிருல்லா களம் காண்கிறார்.

23. சிதம்பரம்: ம.ஜ.க பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி போட்டியிடுகிறார்.

24. சிவகங்கை: முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் போட்டியிடுகிறார்.

25. பென்னாகரம்: ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம்.தமிழ்குமரன் (காங்கிரஸ்) போட்டியிடுகிறார்.

26. ராஜபாளையம்: ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன் (த.ம.மு.க) போட்டியிடுகிறார்.

27. ராதாபுரம்: தமிழகச் சட்டமன்றச் சபாநாயகர் மு.அப்பாவு (தி.மு.க) மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்த 27 தொகுதிகளும் வெறும் வெற்றி-தோல்விக்கான இடங்கள் மட்டுமல்ல, தமிழக அரசியலில் அடுத்தகட்ட அதிகார மையங்கள் யார் என்பதைத் தீர்மானிக்கும் களங்களாகவும் பார்க்கப்படுகின்றன. குறிப்பாகத் த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் களம் காணும் தொகுதிகள் கூடுதல் கவனம் பெற்றுள்ளன.