இனி ஹோட்டல்களில் கட்டாய சேவை கட்டணம் வசூலிக்க முடியாது!

 
ஹோட்டல்

 

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாக சேவை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

உணவகங்களில் உணவுக் கட்டணத்துடன் தானாகவே சேவை கட்டணத்தைச் சேர்த்து வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, கடந்த 2022-ம் ஆண்டு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், வாடிக்கையாளர்களின் ஒப்புதல் இல்லாமல் சேவை கட்டணத்தை ரசீதில் சேர்க்கக் கூடாது என வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

இதை எதிர்த்து தேசிய உணவக சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சேவை கட்டணம் கட்டாயமின்றி வாடிக்கையாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என கடந்த மார்ச் 28-ம் தேதி உத்தரவிட்டார்.

மேலும், சேவை கட்டணம் அரசு வரி போன்ற தவறான புரிதலை ஏற்படுத்தக்கூடாது என்றும், 'விருப்ப நன்கொடை' அல்லது 'ஊழியர் நல நிதி' போன்ற தெளிவான பெயர்களைப் பயன்படுத்தலாம் என்றும் உத்தரவில் கூறப்பட்டதாகத் தெரிகிறது.

No hotel or restaurant shall add a service charge automatically or by default in the food bill. Penalties will be imposed up to ₹50,000 - Central government.

இந்த உத்தரவை எதிர்த்து உணவக சங்கங்கள் மேல்முறையீடு செய்துள்ளன. அந்த மனுக்கள் மீதான விசாரணையின்போது, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்ற அமர்வு மறுத்துள்ளது. மேல்முறையீட்டு வழக்கின் இறுதி முடிவு இன்னும் வெளியாகவில்லை.

எனவே, சேவை கட்டணத்தை முழுமையாக வசூலிக்கத் தடை விதிக்கப்பட்டதாகக் கருதக்கூடாது. வாடிக்கையாளர்களைக் கட்டாயப்படுத்தி அல்லது தானாகவே பில்லில் சேர்த்து வசூலிப்பதே இந்த விவகாரத்தின் முக்கிய அம்சமாகும்