ஓபிஎஸ் முதல் செந்தில் பாலாஜி வரை... அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்த 13 பேருக்கு வாய்ப்பு!

 
அதிமுக திமுக அதிமுக திமுக

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட 164 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலில், அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த 13 முக்கியத் தலைவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த 13 பேர் பட்டியலில் சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முதல் நீண்டகாலமாக திமுகவில் அமைச்சர்களாக இருப்பவர்கள் வரை அடங்குவர்.

திமுகவில் ஓபிஎஸ்

ஓ. பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூர் (சமீபத்தில் பிப்ரவரி 2026-ல் திமுகவில் இணைந்தார்), ஆர். வைத்திலிங்கம்: ஒரத்தநாடு (ஓபிஎஸ் ஆதரவாளர், ஜனவரி 2026-ல் இணைந்தார்), மனோஜ் பாண்டியன்: ஆலங்குளம் (முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன்), வி. செந்தில் பாலாஜி: கோயம்புத்தூர் தெற்கு (கரூர் தொகுதியில் இருந்து கோவைக்கு மாற்றப்பட்டுள்ளார்), அனிதா ராதாகிருஷ்ணன்: திருச்செந்தூர், ராஜ கண்ணப்பன்: முதுகுளத்தூர், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்: அருப்புக்கோட்டை, எ.வ. வேலு: திருவண்ணாமலை, பி.கே. சேகர்பாபு: துறைமுகம், முத்துசாமி: ஈரோடு மேற்கு, தோப்பு வெங்கடாசலம்: பெருந்துறை, ஆஸ்டின்: கன்னியாகுமரி, வில்வநாதன்: ஆம்பூர்

செந்தில்பாலாஜி ஸ்டாலின்

கடந்த சில மாதங்களாகவே ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அவர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பது அதிமுக முகாமுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், எ.வ. வேலு போன்றவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே திமுகவுக்கு வந்தவர்கள் என்றாலும், ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இவர்களை "அதிமுக பின்னணி கொண்டவர்கள்" என்றே அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே தங்கள் தொகுதிகளில் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதால், இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பதன் மூலம் அந்தத் தொகுதிகளை எளிதில் கைப்பற்றலாம் என திமுக தலைமை கணக்கு போட்டுள்ளது.