₹‎300 கோடி ஜெட் விமானம் முதல் ₹‎100 கோடி ஹெலிகாப்டர் வரை.. வாயை பிளக்க வைக்கும் அம்பானி வீட்டு திருமண பரிசுகள்!

 
ஆனந்த் அம்பானி

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் தம்பதியினருக்கு திருமண பரிசு வழங்குவது தொடர்பான சில வாயை பிளக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நடத்தி முடித்துள்ளார். உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களின் திருமண மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும், இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் அனைவருகலந்து கொண்டனர்.

திருமண பரிசாக முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானிக்கு விலை உயர்ந்த கார், வைரம், முத்து உள்ளிட்ட நூறு கோடி மதிப்புள்ள நகைகள் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், முகேஷ் அம்பானி - நீதா தம்பதியினர் பாம் ஜுமேராவில் சுமார் 3 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சொகுசு வீட்டை பரிசாக அளித்துள்ளனர். தரவுகளின்படி, இதன் மதிப்பு சுமார் 640 கோடி ரூபாய். இந்த சொகுசு மாளிகையில் 10 படுக்கையறைகள் மற்றும் ஒரு தனியார் கடற்கரை உள்ளது.

இதுமட்டுமின்றி திருமண விழாவில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் ஆடம்பரமான பரிசுகளை வழங்கினர். திருமண விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிரான்சில் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பிலான பிளாட்டை பரிசாக வழங்கியுள்ளார். அதேபோல் சல்மான் கான் 16 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய ரக ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசாக வழங்கியுள்ளார். இதையடுத்து, ரன்வீர் சிங்-தீபிகா படுகோன் ஜோடி ரூ.20 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராயல்ஸ் காரை பரிசாக அளித்தனர்.

அதேபோல் ரன்பீர் கபூர்-ஆலியா பட் ஜோடி 9 கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் காரை பரிசாக அளித்துள்ளனர். 60 லட்சம் மதிப்புள்ள தங்க பேனாவை அக்ஷய் குமார் பரிசாக வழங்கினார். நடிகர், நடிகைகள் பரிசு கொடுத்தால் இல்லை. உலகின் பெரும் பணக்காரர்கள் முதல் ஃபேஸ்புக், கூகுள் நிறுவனங்களின் சிஇஓக்கள் வரை முக்கிய பிரபலங்கள் பரிசுகளை வழங்கியுள்ளனர்.

Facebook CEO Mark Zuckerberg ரூ.300 கோடி மதிப்பிலான ஜெட் விமானத்தை பரிசளித்துள்ளார். பில்கேட்ஸ் ரூ.180 கோடி மதிப்பிலான தனியார் சொகுசு படகும், சுந்தர் பிச்சை ரூ.100 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டரும் பரிசாக வழங்கியுள்ளனர். இதனுடன் பிரபல அமெரிக்க மல்யுத்த வீரர் ஜான் சீனா 3 கோடி ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி காரை பரிசாக அளித்துள்ளார். நாம் குறிப்பிட்டது தவிர, திருமண விழாவில் பங்கேற்ற பல விருந்தினர்கள் விலை உயர்ந்த பரிசுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா