இன்று ஏப்.1 முதல் சிலிண்டரில் இருந்து டோல்கேட் கட்டணம் வரை... அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்!

 
ஏப்ரல் 1
இன்று ஏப்ரல் 1ம் தேதி முதல் நிறைய விஷயங்களில் மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. பல முக்கியப் பணிகளுக்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று அமலுக்கு வந்து, அடுத்த நிதியாண்டு துவங்கியுள்ளது. 

ஃபாஸ்ட் டேக் :

இன்று ஏப்ரல் 1ம் தேதி முதல் KYC இல்லாத Fastag வேலை செய்யாது. FASTag KYC விவரங்களைப் புதுப்பிப்பதை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது. அதன் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளது. உங்கள் Fastag செயலிழக்கப்படும் அல்லது தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும். அதாவது இனி சுங்கசாவடியில் கட்டணத்தை ரொக்கமாக வரி செலுத்த வேண்டும், டோலை ரொக்கமாக செலுத்தினால் இரட்டிப்பு சுங்கவரி செலுத்த வேண்டும்.

பாஸ்ட் டேக்

சமையல் சிலிண்டர் : 

சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியும், 15ம் தேதியும் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்படும் நிலையில், நாளை சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

CASH BACK ஆபர்!! கேஸ் சிலிண்டருக்கு சிறப்பு சலுகை !! உடனே முந்துங்க!!

மின்சார வாகனம்  : மின்சார ஸ்கூட்டர்களின் விலை இன்று முதல் புதிய வரி அறிவிப்பின் காரணமாக உயர கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முதல் மின்சார ஸ்கூட்டர்களின் விலை அதிகரித்துள்ளது. 

மருந்துகள் விலை உயர்வு : 

இன்று ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் 800 அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்தப்பட்டுள்ளதாக  மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்றூ முதல் பாராசிட்டமால், மார்பின், அட்ரினலின், சிட்ரிசின், பாம்பு விஷத்திற்கு எதிரான ஆன்டிசீரம், சல்புடமைன், சாலிசிலிக் அமிலம், ரேபிஸ் தடுப்பூசி, பிசிஜி, டிபிடி, ஹெபடைடிஸ் பி, ஜப்பான் காய்ச்சல், டெட்டனஸ் தடுப்பூசிகள், ஸ்டீராய்டுகள் உட்பட பலவகையான மருந்துகளின் விலை அதிகரித்துள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web