திருப்பரங்குன்றத்தில் இன்று முதல் டிச.15 வரை உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே பக்தர்கள் தீபமேற்ற அனுமதி!

 
திருப்பரங்குன்றம்

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே இன்று முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை தினமும் பக்தர்கள் தீபமேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோயில் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே இன்று முதல் வரும் டிசம்பர் 15-ஆம் தேதி வரை பக்தர்கள் தீபமேற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை பக்தர்கள் தீபமேற்ற அனுமதிக்கப்படுவார்கள்.

தீபமேற்ற வரும் பக்தர்கள் உரிய வழிகாட்டுதல்களைத் தவறாமல் பின்பற்றுமாறு கோயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திருப்பரங்குன்றம்

முன்னதாக உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டதைக் கண்ட பக்தர்கள் பக்திப் பரவசத்தில் மூழ்கினர். "அரோகரா! அரோகரா!" என்ற பக்தி முழக்கங்களுடனும் வாணவேடிக்கைகளுடனும் மலை உச்சியே உற்சாகத்தில் நிறைந்தது. தீபம் ஏற்றுவதற்கு உரிய பாதுகாப்பு வழங்கிய சி.ஆர்.பி.எஃப். வீரர்களுக்குப் பக்தர்கள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.