காய்கறிகள், தேநீர் முதல் மருத்துவ பொருட்கள் வரை…. வர்த்தகத்தை நிறுத்த இந்தியா பரிசீலணை... பெரும் சிக்கலில் பாகிஸ்தான்!

 
காய்கறிகள், தேநீர்  முதல் மருத்துவ பொருட்கள்

இந்தியாவில் சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட திடீர் தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு  பதிலடி கொடுக்கும் வகையில்  பாகிஸ்தானுக்கு எதிராக  இந்தியா  கடுமையான  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கான முதல் கட்டமாக, இரு நாடுகளின் முக்கிய வர்த்தக எல்லையான அட்டாரி-வாகா எல்லைகள் மூடப்பட்டன.  இந்தியா தற்போது பாகிஸ்தானுடன் உள்ள அனைத்து உறவுகளையும் முற்றிலும் துண்டிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.  
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தகம் நிறுத்தப்பட்டால், சில பொருட்களின் விலை இந்தியாவில் உயர வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தானிலிருந்து இந்தியா அதிக அளவில் முந்திரிப்பருப்பு, பிஸ்தா,  போன்ற உலர் பழங்களை இறக்குமதி செய்கிறது.
இதே உலர்ந்த பழங்கள் மற்ற நாடுகளிலிருந்தும் வாங்கப்படுவதால் அதன் தாக்கம் குறைவு தான். அதே நேரத்தில்  இந்தியா பாகிஸ்தானிலிருந்து மட்டுமே வாங்கும் உப்பு (சிறப்பு நோன்பு உப்பு) விலை அதிகரிக்கக் கூடும்.  
அதே போல்  கணினிக்கண்ணாடி வகை லென்ஸ்கள், சில கட்டுமானப் பொருட்கள், பருத்தி, எஃகு பொருட்கள், மேல்நிலை வேதியியல் பொருட்கள் போன்றவற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் என்பதால் சில தற்காலிக பாதிப்புகள் ஏற்படலாம்.
வர்த்தகம் முற்றிலும் முடிந்தால் அதனால் பாகிஸ்தானே அதிகம் பாதிக்கப்படும் என பொருளாதார நிபுணர்கள் மதிப்பீடு செய்கின்றனர். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் சிரமப்படுகின்ற பாகிஸ்தான், இந்தியாவிலிருந்து பருத்தி, காய்கறிகள், பழங்கள், தேநீர், காபி, மருத்துவப் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பால் மற்றும் மாட்டுத் தீவன பொருட்கள் உட்பட  பல்வேறு முக்கிய தேவைப் பொருட்களை இறக்குமதி செய்கிறது.  இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் மேலும் பெரிய அதிர்வுகளை சந்திக்கலாம் என்கின்றனர் .

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web