பழ. நெடுமாறனின் இளைய மகன் மாணிக்கம் நெடுமாறன் காலமானார் - பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் இறுதிசடங்கில் பழ.நெடுமாறன் பங்கேற்கவில்லை!
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறனின் இளைய மகனான மாணிக்கம் நெடுமாறன் (57), ஆஸ்திரேலியாவில் நேற்று காலமானார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்த மாணிக்கம் நெடுமாறன், இளம் வயதிலேயே புத்த மதத்தைத் தழுவித் துறவு பூண்டு, புத்த துறவியாகத் தன் வாழ்நாளைக் கழித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக உடல்நலக் குறைபாடு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இந்திய நேரப்படி காலை 8.45 மணிக்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இறுதிச் சடங்குகள் புத்த மதச் சடங்குகளின்படி மெல்பர்ன் நகரிலேயே நடைபெறவுள்ளன. பழ. நெடுமாறனின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டிருப்பதன் காரணமாக, ஆஸ்திரேலியா சென்று மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அவரும் அவரது மனைவியும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
