கடன் வாங்கியவர் தற்கொலை செய்து கொண்டதால் விரக்தி.. குடும்பத்துடன் விபரீத முடிவை எடுத்த நபர்!
திருப்பூரில் கடன் வாங்கியவர் தற்கொலை செய்து கொண்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நாகசுரேஷ் (40). இவரது மனைவி விஜயலட்சுமி (35). இவர்களது மகள் முத்தீஸ்வரி (5). இவர்கள் 3 பேரும் கடந்த ஓராண்டாக திருப்பூர் அணைக்காடு வசித்து வந்தனர். திருப்பூரில் தான் தங்கியிருந்த வீட்டுக்கு நாகசுரேஷ், தனது உறவினர் சூரியமூர்த்தி முன்னிலையில் வீட்டு உரிமையாளரிடம் ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார்.
மேலும் நாகசுரேஷ் கடனாக ரூ. 5 லட்சத்தை அவரது உறவினர் சூரியமூர்த்திக்கு வழங்கினார். இந்நிலையில், கடந்த வாரம் சூர்யமூர்த்தி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சூரியமூர்த்தியின் மனைவியிடம் கடனாக கொடுத்த பணத்தை நாகசுரேஷ் கேட்டதாக கூறப்படுகிறது. சூர்யமூர்த்தி இறந்துவிட்டதால் கொடுத்த பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சூர்யமூர்த்தியின் மனைவி கூறியதாக கூறப்படுகிறது.
இதில் மன உளைச்சலில் இருந்த நாக சுரேஷ் இன்று மனைவி மற்றும் மகளுடன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாங்கள் அணிந்திருக்கும் நகைகளை விற்று இறுதிச் சடங்குகளைச் செய்யுமாறு நாகசுரேஷ் தனது கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!