6 மாத குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரை சேர்க்கத் தடை? FSSAI புதிய திட்டம்
குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சர்க்கரை சேர்ப்பதைக் கட்டுப்படுத்த இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) புதிய வரைவு விதிமுறையை முன்மொழிந்துள்ளது.
India’s food regulator proposes ban on added sucrose, fructose in infant food for babies up to six months https://t.co/FyX1recKvS #FSSAI #InfantNutrition #FoodSafety #Parenting #CNBCTV18
— CNBC-TV18 (@CNBCTV18News) October 19, 2026
இதன்படி, 6 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களில் சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் சர்க்கரைகளைச் சேர்க்கக் கூடாது எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கான வரைவு திருத்தம் அக்டோபர் 16-ம் தேதி வெளியிடப்பட்டது.
குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சிக்கு ஏற்ற ஊட்டச்சத்தை உறுதி செய்வதும், சிறு வயதிலேயே கூடுதல் சர்க்கரை உட்கொள்வதைக் குறைப்பதும் இதன் நோக்கமாகும். இந்த வரைவு விதிமுறைக்கு பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினர் கருத்து தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கருத்துகள் பரிசீலிக்கப்பட்ட பிறகே விதிமுறை இறுதி செய்யப்படும். எனவே, இது தற்போது முன்மொழியப்பட்ட விதிமுறைதான்; இறுதி நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கருதக்கூடாது.
