எரிபொருள் தட்டுப்பாடு... டெல்லியில் வாரத்தில் 2 நாட்கள் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ அறிவிப்பு!

 
டெல்லி எரிபொருள் தட்டுப்பாடு வொர்க் ஃப்ரம் ஹோம் டெல்லி எரிபொருள் தட்டுப்பாடு வொர்க் ஃப்ரம் ஹோம்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, டெல்லி மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

டெல்லி முதல்வர் ரேகா குப்தா, அரசு ஊழியர்களின் பணி முறையில் மாற்றம் செய்து புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.  டெல்லி அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் 2 நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற (Work from home) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வொர்க் ப்ரம் ஹோம்

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஆலோசனையையும் வேண்டுகோளையும் ஏற்று, இந்தச் சிக்கன நடவடிக்கையை டெல்லி அரசு அமல்படுத்தியுள்ளது.

அரசுத் துறையைப் போலவே தனியார் நிறுவனங்களும் இந்தச் சூழலில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். தனியார் நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கு வாரத்தில் சில நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி வழங்கி, நாட்டின் பொருளாதார நிலையைச் சீரமைக்க உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

`வொர்க் ஃப்ரம் ஹோம்’ பணிபுரிபவர்களே! ரிலாக்ஸ் பண்ண இதை ட்ரை பண்ணுங்க..!

மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி அரசின் இந்த அதிரடி முடிவு போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு, எரிபொருள் பயன்பாட்டையும் கணிசமாகக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.