பிரியாணி பார்சலில் கோழியின் முழு தலை.. ஷாக்கான வாடிக்கையாளர்..!!

 
பிரியாணி பார்சலில் கோழி முழு தலை
பிரியாணி பார்சலில் கோழி தலை முழுவதுமாக அப்படியே இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியை சேர்ந்தவர் பிரதிபா. இவர் அண்மையில் முத்தூரில் உள்ள பரோட்டா கடையில் 4 பிரியாணி பார்சல்கள் வாங்கி உள்ளார். அவற்றை குடும்பத்துடன் சாப்பிட வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். வீட்டில் வைத்து பிரியாணி பார்சல்களை பிரித்து பார்த்துள்ளார். அதில் ஒரு பார்சலில் பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்திருக்கிறது.

Kerala Food Safety Dept closes eatery after woman finds whole chicken head  in biriyani, latest news, kerala news, food poisoning, malappuram

அதனைப்பார்த்து பிரதிபா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பிரியாணிக்குள் கோழி தலை கிடந்தது குறித்து திரூர் நகராட்சியின் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஓட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். பின்பு அந்த ஓட்டலுக்கு சீல் வைத்து மூடினார்கள்.

മലപ്പുറത്ത് ഹോട്ടലിൽ നിന്ന് ഓർഡർ ചെയ്ത ബിരിയാണിയില്‍ വേവിക്കാത്ത  കോഴിത്തല|woman gets raw chicken head from biryani parcel in malappuram –  News18 Malayalam

பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்ததால் எர்ணாகுளத்தில் ஓட்டலை அதிகாரிகள் மூடிய சம்பவம் கேரள மாநிலம் மலப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் உங்கள் பகுதியில் உள்ள ஓட்டலில் நீங்களும் கரப்பான் பூச்சி, ஈ, வண்டு என எதையாவது பார்த்திருப்பீர்கள். அதைபற்றியும், ஓட்டல் ஓனர்கள் அதற்கு அளித்த பதில் பற்றியும் உங்கள் கருத்தை கமெண்டில் கூறுங்கள்.

From around the web