1 முதல் 9ம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு!

 
டிபிஐ பள்ளி கல்வித்துறை டிபிஐ பள்ளி கல்வித்துறை

தமிழ்நாட்டில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான 2025-2026 கல்வியாண்டின் முழு ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த அட்டவணை இறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கோடைக்காலம் மற்றும் சட்டமன்றத் தேர்தல் பணிகளைக் கருத்தில் கொண்டு, பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி 16-ம் தேதிக்குள் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் மாணவிகள் ரிசல்ட் சிபிஎஸ்இ ஸ்கூல் படிப்பு

வகுப்பு வாரியான தேர்வு தேதிகள்:

வகுப்புகள்

தேர்வு தொடங்கும் நாள்

தேர்வு முடியும் நாள்

1 முதல் 3-ஆம் வகுப்பு

ஏப்ரல் 8, 2026

ஏப்ரல் 16, 2026

4 மற்றும் 5-ஆம் வகுப்பு

ஏப்ரல் 6, 2026

ஏப்ரல் 16, 2026

6 முதல் 9-ஆம் வகுப்பு

ஏப்ரல் 1, 2026

ஏப்ரல் 16, 2026

 மே 16ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்? 

விடுமுறை மற்றும் அடுத்த கல்வியாண்டு:

தேர்வுகள் ஏப்ரல் 16-ம் தேதியோடு நிறைவடைவதால், மாணவர்களுக்கு ஏப்ரல் 17, 2026 முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. ஏப்ரல் 23-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், பள்ளி வளாகங்கள் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட உள்ளன. இதைக் கருத்தில் கொண்டே ஏப்ரல் 16-க்குள் தேர்வுகளை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

2026-2027 புதிய கல்வியாண்டிற்கான பள்ளிகள் தொடங்கும் நாள் ஜூன் 1, 2026 (திங்கட்கிழமை) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தின் கீழ் மதிப்பீட்டுத் தேர்வுகள் நடைபெறும். 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட வாய்ப்புள்ளது.